close
Choose your channels

2019, தமன்னாவின் வருடமா? குவியும் படங்கள்

Monday, November 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டு தமன்னா நடிப்பில் விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' படம் மட்டுமே வெளிவந்த நிலையில் அடுத்த ஆண்டு அவர் நடித்த சுமார் 10 படங்கள் வரை வெளியாக வாய்ப்பு இருப்பதால் 2019ஆம் ஆண்டு தமன்னாவின் ஆண்டாக இருக்கும் என திரையுலகினர் கூறி வருகின்றனர்.

சீனுராமசாமி இயக்கத்தில் தமன்னா நடித்த 'கண்ணே கலைமானே' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் அடுத்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரபுதேவாவுடன் தமன்னா நடித்து வரும் 'தேவி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதுபோக விஷாலுடன் சுந்தர் சி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.

'குயீன்' ரீமேக் படமான 'தட் இஸ் மகாலட்சுமி' என்ற படம், சிரஞ்சீவி நடித்து வரும் சைய நரசிம்மரெட்டி' என்ற படம், F2 என்ற படம், ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படம் என தெலுங்கில் மட்டும் தமன்னா நான்கு படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு இந்தி படத்திலும் தமன்னா நடித்து வருகிறார்.

கடந்த 2005ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான நடிகை தமன்னா இந்த 13 வருடங்களில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.