பேங்க் லாக்கருக்கே இந்த நிலமையா? அதிர்ச்சி சம்பவம்!

  • IndiaGlitz, [Saturday,January 23 2021]

குஜராத் மாநிலத்தின் வதோரோ நகரில் உள்ள ஒரு பேங்க் லாக்கரில் அதன் பயனாளி ஒருவர் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பத்திரமாக வைத்து உள்ளார். அவசர தேவைக்காக வைக்கப்பட்டு இருந்த அந்த பணத்தை அதன் ஊழியர்களுக்கே தெரியாமல் கரையான்கள் அரித்து சாப்பிட்டு இருக்கிறது. இதை அறிந்த அந்த பயனாளி பதறிப்போய் இருக்கிறார். மேலும் உங்கள் பொறுப்பில் வைக்கப்பட்ட அந்தப் பணத்திற்கு நீங்கள்தான் பொறுப்பு, எனவே உரிய தொகையை திரும்ப வழங்க வேண்டும் என அந்த வங்கியிடம் கோரிக்கை வைத்து இருக்கிறார்.

வதோராவின் பிரதாப் சாலையில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கியில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. பொதுவாக பேங்க் லாக்கரில் ஆவணங்கள் மற்றும் தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை வைக்கிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக பேங்க் லாக்கருக்கு பணம் செலுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுடைய பொருளை வைத்து வருகின்றனர். இப்படி வைக்கும் பொருட்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் போனால் அதை என்னவென்று சொல்வது.

இந்த நிலைமைதான் குதுபுதீன் தேசர்வால் எனும் நபருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அவசரத் தேவைக்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை இழந்து இருக்கிறார். இதனால் தன்னுடைய பணத்தைத் திரும்ப கொடுக்குமாறு அந்த வங்கி மேலாளருக்கு அவர் கோரிக்கை வைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ்: சுரேஷ் தாத்தா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று ஃபினாலே நிகழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது என்பது தெரிந்ததே

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ரகசியத்தை கசியவிட்ட நடிகை: சமூக வலைத்தளங்களில் பரபரப்பு!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படத்தின் ரகசியத்தை பிரபல நடிகை ஒருவர் கசிய விட்ட நிலையில், படக்குழுவினர் கேட்டுக் கொண்டதை

பிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கினாரா ஹேமந்த்? கருவை கலைத்ததாகவும் தகவல்!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் இன்னும் மர்ம முடிச்சுகள் விழாத நிலையில் தற்போது மேலும் சில திடுக்கிடும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மாஸ்டர்' படத்தின் 10 நாட்கள் வசூல்: மொத்த வசூல் இத்தனை கோடியா?

ளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

'குக் வித் கோமாளி' ரசிகர்களுக்கு ஏற்பட்ட இரண்டாவது ஏமாற்றம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 'குக்குகளை கோமாளிகள் அதிக அளவு காமெடி