close
Choose your channels

Test Review

Review by IndiaGlitz [ Saturday, April 5, 2025 • മലയാളം ]
Test Review
Banner:
YNOT Studios
Cast:
R. Madhavan, Nayanthara, Siddharth, Meera Jasmine, Kaali Venkat, Nassar, Vinaiy Varma
Direction:
S. Sashikanth
Production:
Chakravarthy, Ramachandra, S. Sashikanth
Music:
Shakthisree Gopalan

திறமையான நடிகர்களால் சிறப்பான படமாக மாறி இருக்கிறது '  டெஸ்ட் ' !

நயன்தாரா ,மாதவன் ,சித்தார்த் ஆகியோரது நடிப்பில் உருவான திரைப்படம் ' டெஸ்ட் ' YNot ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். Netflix ஒரிஜினலாக வெளியாகி இருக்கிறது இத்திரைப்படம்.

டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெறும்படி அர்ஜுனுக்கு ( சித்தார்த்) கிரிக்கெட் வாரியம் நெருக்கடி கொடுக்கிறது. ஆனால் எப்படியாவது தன்னை நிரூபிக்க போராடுகிறார் அர்ஜுன். இன்னொரு புறம் தண்ணீரில் இருந்து பெட்ரோல் எடுக்கும் ப்ராஜெக்ட்டுக்கு எப்படியாவது இந்திய அரசாங்கத்தின் ஒப்புதல் கிடைக்க வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார் சரா என்கிற சரவணன் ( மாதவன்). சராவின் மனைவி குமுதாவுக்கு ( நயன்தாரா)  தனக்கொரு குழந்தை பிறக்க வேண்டும் என செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மூலம் முயற்சி செய்ய போராடி வருகிறார். அதற்கு போதுமான பணம் தேவை. இப்படி மூவரின் வாழ்க்கையில் நடக்கும் டெஸ்ட் ரிசல்ட் என்ன என்பது மீதி கதை.

மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் நால்வருமே போட்டி போட்டுக்கொண்டு தங்களது நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக எந்த நிலையிலும் தனது குறிக்கோளை விடாமல் போராடும் சித்தார்த், வீட்டிலும் வெளியிலும் போதிய மரியாதை கிடைக்காமல் கூனிக் குறுகும் மாதவன், முதல்முறையாக லைவ் ரெக்கார்டிங்கில் தனது சொந்த குரலில் பேசி நடித்திருக்கும் நயன்தாரா என ஒவ்வொரு கதாபாத்திரமும் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப இவர்களும் தங்களது முழு திறமையையும் மேலும் அளவான நடிப்பையும் கொடுத்திருக்கிறார்கள்.

அதிலும் படம் முழுக்க அமைதியாக இருந்து கடைசியில் ஒரே டேக்கில் பொங்கி எழும் மீரா ஜாஸ்மின் பாராட்டு பெறுகிறார்.

இயக்குனர் சஷிகாந்த் மேக்கிங் மற்றும் படமாக்களில் அதீத மெனக்கெட்டு படத்தை அவ்வளவு ரிச் டோனில் கொடுத்திருக்கிறார். ஆனால் கதையில் மற்றும் திரைக்கதையில் இன்னும் சற்று வேகத்தையும் அதே போல் சில குழப்பமான தருணங்களையும் சரி செய்து இருக்கலாம். குறிப்பாக இந்திய விஞ்ஞானி என மாதவனை காட்டிவிட்டு அவர் இப்படி ஒரு செயலை செய்வாரா என்கிற கேள்வியையும் திரைக்கதை ஏற்படுத்துகிறது. என்னதான் வித்தியாசமான நடிப்பு நெகட்டிவ் ரோல் என்றாலும் தர்மமாக இந்த கதை சற்றே ஏற்றுக் கொள்ள முடியாதபடி இருக்கிறது. எனினும் சுற்றி இருக்கும் சூழல் ஒரு மனிதனை எப்படியும் மாற்றும் என்னும் கருத்தை மாதவன் கேரக்டர் மூலமாக காட்டி இருக்கிறார் சசிகாந்த்.

விராஜ் சிங் கோலி ஒளிப்பதிவில் டெஸ்ட் மேட்ச் தொடர்கள் நம்மை மீண்டும் பழைய இந்திய கிரிக்கெட் தருணங்களுக்கு இழுத்துச் செல்கிறது. உண்மையாகவே லைவ் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது. நயன்தாரா, மாதவன், என அத்தனை பேரின் லுக் மற்றும் தோற்றம் அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார்.

டி எஸ் சுரேஷ் எடிட்டிங்கில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். ஒவ்வொரு காட்சிகளும் நீண்ட நேரம் செல்கிறது. மேலும் ஒரு சில காட்சிகள் ரிப்பீட் மோடில் வேறு வேறு காஸ்டியூம்களில் எடுக்கப்பட்டிருப்பது போன்ற உணர்வும் ஏற்படுகிறது. பாடகி சக்திஶ்ரீ கோபாலன் முதல்முறையாக இந்த படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமாக பின்னணி இசையும் குறிப்பாக ' ஹோப் ' பாடல்,  காட்சிகளில் உள்ள உணர்வுகளை ஆழமாக கடத்துகிறது. ' விலகிடா வெள்ளை கதிரே ... வரிகள் நிச்சயம் மனதை பிசையும்.

மொத்தத்தில் டெஸ்ட் திரைப்படம் தேர்ந்த நடிகர்கள் மற்றும் திறமையான படமாக்களால் சற்றே தேறி நிற்கிறது.

Rating: 2.5 / 5.0

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE