இசை மேதையை நேரில் சந்தித்து ஆசிபெற்ற விஷாலின் 'நம்ம அணி'

  • IndiaGlitz, [Tuesday,April 04 2017]

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலின் நம்ம அணியினர் பெரும்பாலான பதவிகளில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அனைவரும் வரும் 6ஆம் தேதி ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் பதவியேற்கவுள்ளனர்.
இந்நிலையில் சற்று முன்னர் விஷால், பிரகாஷ்ராஜ், பார்த்திபன் உள்பட 'நம்ம அணி' நிர்வாகிகள் இசைஞானி இளையராஜாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்றனர். வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவருக்கு இளையராஜா வாழ்த்து தெரிவித்தார்.
ஏற்கனவே நேற்றைய செய்தியாளர் சந்திப்பில், 'இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அனுமதி பெற்று விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக விஷால் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்து செய்த உலக சாதனைக்காக நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து மிகப்பெரிய பாராட்டுவிழா ஒன்று விரைவில் நடத்தப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

More News

பிரபல இளம் நடிகையின் கணவர் திடீர் தற்கொலை

அருள்நிதி நடித்த 'வம்சம்' மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' போன்ற திரைப்படங்களிலும், 'சரவணன் மீனாட்சி' உள்ளிட்ட ஒருசில சீரியல்களிலும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மைனாநந்தினி.

எங்களுக்கு இன்னொரு முகம் உண்டு. ஞானவேல்ராஜா எச்சரிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் முடிந்தவுடன் வெற்றி பெற்ற விஷாலின் நம்ம அணியினர் நேற்று பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் தங்களுக்கு வாக்களித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்

கமல்ஹாசன் ஒரு உண்மையான தீவிரவாதி. சொன்னவர் யார் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' படத்தில் தீவிரவாதிகள் குறித்த விரிவான அலசல் இருந்தது என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை.

உலகின் மிக அழகான பெண்கள் பட்டியலில் விஜய் நாயகிக்கு 2வது இடம்

அமெரிக்காவை மையமாக கொண்ட பஜ்நெட் என்ற அமைப்பு உலகின் மிக அழகான பெண்கள் குறித்த பட்டியல் ஒன்றை தயார் செய்து அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.

இதைவிட கேவலம் வேறு எதுவும் இல்லை. பார்த்திபனின் வருத்தமான பதிவு

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலின் 'நம்ம அணி' அமோகமாக வெற்றி பெற்று வரும் 6ஆம் தேதி பதவியேற்கவுள்ளது.