close
Choose your channels

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sunday, November 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் பல மாதங்களாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி தற்போது படக்குழுவினர்களால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீசர் நவம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே ரிலீஸ் ஆன இந்த படத்தின் சிங்கிள் பாடல் 'சொடக்கு மேல சொடக்கு போட்டு' பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த டீசரை வரவேற்க சூர்யா ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்த டீசர் ரிலீஸ் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் #TSKTeaserOnNov30  என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனதில் இருந்தே சூர்யா ரசிகர்களின் ஆர்வத்தை புரிந்து கொள்ளலாம்

சூர்யா, சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் கார்த்திக் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றை ஏற்று நடித்து வருகிறார். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். விக்னேஷ்சிவன் இயக்கி வரும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.