close
Choose your channels

மீண்டும் மதம் மாறிய தாடி பாலாஜி

Thursday, February 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானவர் நடிகர் தாடி பாலாஜி. தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்ந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து நித்யா விரைவில் வெளியேறிவிட்டாலும் தாடி பாலாஜி கிட்டத்தட்ட நிகழ்ச்சியின் முடிவு வரை தாக்கு பிடித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின்போதே பிரிந்திருந்த தாடி பாலாஜியும் நித்யாவும் கருத்து ஒற்றுமை ஏற்பட்டு இணைந்துவிட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாடி பாலாஜி மனநிம்மதியை தேடி மதம் மாறியதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது மீண்டும் அவர் தனது தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பியுள்ளார்.

மீண்டும் தாய் மதத்திற்கு திரும்பியது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய தாடிபாலாஜி, 'நம்முடைய கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை இழந்து, அடிமை போல் இருக்க வேண்டிய நிலை உருவானதால், தாய் மதம் திரும்பியதாக, தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.