தல அஜித் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்?

  • IndiaGlitz, [Wednesday,February 01 2017]

தல அஜித் நடித்து வரும் 57வது படமான 'அஜித் 57' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக்கை அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர். ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர்கள் ஃபர்ஸ்ட்லுக்கிற்காக இயக்குனர் சிறுத்தை சிவாவை சமூக வலைத்தளங்கள் மூலம் அன்புடன் மிரட்டும் அளவுக்கு அவர்களுடைய ஆர்வம் சென்றுவிட்டது.

கடந்த தீபாவளி, பொங்கல், குடியரசு தினம் ஆகிய தினங்களில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று ஏங்கியிருக்கும் அஜித் ரசிகர்களுக்காக தற்போது புதிய தகவல் வந்துள்ளது.

இதன்படி அஜித் 57' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நாளை அதிகாலை அதாவது பிப்ரவரி 2ஆம் தேதி 12.01 மணிக்கு வியாழக்கிழமை செண்டிமெண்ட்படி வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் உண்மையெனில் இன்று இரவு அஜித் ரசிகர்களுக்கு சிவராத்திரிதான் என்பதில் சந்தேகம் இல்லை

More News

இரண்டே வாரத்தில் பஸ் ஓட்ட கற்றுக்கொண்ட பிரபல நடிகை

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடித்து வரும் திரைப்படம் 'இப்படை வெல்லும்'. கவுரவ் இயக்கி வரும் இந்த படத்தை லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது...

சூர்யாவின் 'சி3' படத்தில் ஆங்கில பஞ்ச் வசனம்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வரும் 9ஆம் தேதி இந்த படம் சுமார் 2000 திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது

மீண்டும் இணையும் ராஜேஷ்-சந்தானம் கூட்டணி

பிரபல இயக்குனர் ராஜேஷின் முதல் படமான 'சிவா மனசில சக்தி' படம் முதல் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படம் வரை ஹீரோவுக்கு இணையான கேரக்டரில் நடித்தவர் சந்தானம். தற்போது சந்தானம் ஹீரோவாக புரமோஷன் பெற்றுவிட்டதால் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தில் அவர் நடிக்கவில்லை

'விஜய் 61' படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு தகவல்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

சட்டமன்றத்தில் முதல்வர் காட்டிய பின்லேடன் படம் எங்கு எடுக்கப்பட்டது? திடுக்கிடும் தகவல்

சென்னை மெரீனாவில் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே வன்முறை வெடித்ததாகவும் அரசு தரப்பிலும் காவல்துறையினர் தரப்பிலும் கூறப்பட்டது.