close
Choose your channels

'தல 60' படத்தின் டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு

Friday, October 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதே கூட்டணியில் மீண்டும் ’தல 60’ திரைப்படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ’தல 60’ படத்தின் பூஜை இன்று நடைபெறும் என செய்திகள் வெளிவந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது

இதனை அடுத்து இந்த படத்திற்கு ’வலிமை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக இந்த பூஜையில் இருந்து தெரியவந்துள்ளது. தல அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக உள்ள நிலையில் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.