'வலிமை' அப்டேட்டே இன்னும் வரல, அதுக்குள்ள 'தல 61' அப்டேட்டா?

  • IndiaGlitz, [Thursday,April 29 2021]

தல அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மே 1ஆம் தேதி வரும் என்று எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் வெளியான அறிக்கையில் ’வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது அஜித் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் அப்டேட்டே இன்னும் வராத நிலையில் அஜீத் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான ’தல 61’ படத்திற்காக செய்திகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ’நேர்கொண்டபார்வை’ ’வலிமை’ ஆகிய படங்களை இயக்கிய ஹெச் வினோத் தான் இந்த படத்தையும் இயக்க விருப்பதாகவும் அவர் கூறிய அதிரடி ஆக்ஷன் கதை ஒன்று அஜித்துக்கு பிடித்துவிட்டால் உடனே ஓகே செய்து விட்டதாகவும், இந்த படமும் ஒரு ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படம் என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்தை புதிய வித்தியாசமான ஆக்ஷன் ஹீரோவாக காட்டுவதற்கு இயக்குனர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

’வலிமை’ படத்தின் அப்டேட் எப்போது வரும் என்று தெரியாத நிலையில், அந்த படம் எப்போது ரிலீசாகும் என்று தெரியாத நிலையில் ’தல 61’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என்று வெளிவரும் செய்து அஜித் ரசிகர்களுக்கு ஆனந்தமான செய்தி தான். ஆனால் அதே நேரத்தில் மீண்டும் போனிகபூர் தான் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார் என்பதால் இந்த படத்தின் அப்டேட்டும் அவ்வளவு எளிதில் வராது என்ற வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் உள்ளனர்

More News

லாக்டவுன் வருமா? வராதா? பதில் சொல்லுங்க ஆபீஸர்ஸ்: தமிழ் நடிகர் டுவிட்!

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான பாலசரவணன் 'லாக்டவுன் வருமா? வராதா? பதில் சொல்லு ஆபீசர்ஸ்' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருப்பதியில் கொரோனா தொற்று உறுதியான 1,000 பேர் மாயம்… அதிர்ச்சி தகவல்!

கொரோனா நோய்த்தொற்று சற்றுத் தணிந்து இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அனைத்துக் கோவில்களிலும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கொரோனா வார்டில் சி.ஏ. தேர்வுக்கு படிக்கும் இளைஞர்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் தன்னுடைய டிவிட்டரில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு உள்ளார்.

கொரோனா தடுப்பூசி விலை குறைப்பு… அறிவிப்பு வெளியிட்ட சீரம்!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

சர்ச்சை கேள்விக்கு யுவன்ஷங்கர் ராஜாவின் சாந்தமான பதில்!

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அவர்கள் தனது சமூக வலைதளத்தில் இஸ்லாம் மதம் குறித்து செய்த பதிவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பிய நிலையில்