அஜித்தின் 'தல 61' படம் குறித்த அட்டகாசமான தகவல்!

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள ’வலிமை’ திரைப்படம் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தல அஜித்தின் 61 வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க உள்ளதாகவும் எச் வினோத் இயக்க உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் பல்வேறு லொகேஷன்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் 7 மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து நேர்கொண்டபார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களை அடுத்து மூன்றாவது முறையாக போனிகபூர் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் தல அஜித் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரூ.1000 பஸ் பாஸ் கூடுதல் நாட்களுக்கு செல்லும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு!

ஊரடங்கிற்கு முன் மே மாதம் எடுத்த ரூபாய் 1000 பஸ் பாஸ் ஜூலை 15ஆம் தேதி வரை செல்லும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில் தற்போது பொதுமக்களின்

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அவர்களின் தந்தை சிவன் என்பவர் சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பரிதாபமாக விவசாயி உயிரிழப்பு....! காரணமான போலீஸ் சஸ்பெண்ட்....!

விவசாயியை தாக்கி அவர் உயிரிழந்ததில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மின்கட்டணம் செலுத்த சலுகை...! எந்தெந்த மாவட்டங்களுக்கு...?

கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில், மின்கட்டணம் செலுத்த கால அவகாசத்தை மின்சார வாரியம் வழங்கியுள்ளது.

இந்த குட்டிப்பாப்பா ஒரு நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்: யாரென கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

தமிழ் திரையுலக நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் தனது சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது