close
Choose your channels

'விஸ்வாசம்' படத்தில் பயன்படுத்தப்பட்ட அஜித் டெக்னாலஜி!...

Thursday, January 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியாகிய 'விஸ்வாசம்' திரைப்படம் உலகம் முழுவதும் ஃபேமிலி பார்வையாளர்களின் மாபெரும் ஆதரவை பெற்று ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் தல அஜித் தனது டெக்னாலஜி திறமையையும் வெளிப்படுத்தியுள்ள செய்தி வெளியாகியுள்ளது. அஜித் கடந்த சில வருடங்களாக ஆளில்லா விமானம் தயாரிப்புக்கு பயிற்சி அளித்து வருகிறார் என்பதும் இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் உலக அளவில் சாதனை புரிந்து வருவதும் தெரிந்ததே.

அந்த வகையில் 'விஸ்வாசம்' படத்தின் ஒருசில காட்சிகளில் ஹெலிகேமிரா பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த காட்சிகள் அஜித்தின் ஆலோசனையின்படி படமாக்கப்பட்டதாகவும், ஒருசில காட்சிகளை அவரே ஒளிப்பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.