தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் மோகன்லால்: ஆச்சரியமான தகவல்

  • IndiaGlitz, [Tuesday,March 30 2021]

தல அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைய உள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து இயக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பரோஸ் - நிதி காக்கும் பூதம்- 3டி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை மோகன்லால் நடித்து இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இசையமைப்பாளராக 15 வயது தமிழக சிறுவன் லிடியன் நாதஸ்வரம் அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க அஜீத் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் மோகன்லால் விரும்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் இந்த படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தில் அஜித் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாரா? அல்லது படம் முழுவதும் வரும் முக்கிய கேரக்டரா? என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அஜித்தை அடுத்து விளையாட்டுத்துறையில் அசத்தும் தமிழ் நடிகை!

தல அஜித் நடிப்பில் மட்டுமின்றி துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட விளையாட்டு துறைகளிலும் சாதனை செய்து பதக்கங்களை குவித்து வருகிறார் என்ற செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

131 இடங்களில் அதிமுக முன்னிலை- புதுயுகம் தொலைக்காட்சி சர்வே முடிவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தலை குறித்த சர்வே முடிவுகளும் தமிழகத்தில் பரபரப்பை கிளப்பி வருகின்றன

பெண்களை அவமானப்படுத்துவது  காங்கிரஸ்- திமுககூட்டணி...! மோடி திருப்பூரில் பிரச்சாரம்...!

காங்கிரஸ்-திமுக கூட்டணியின் கலாச்சாரம் பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என பாரத பிரதமர் தாராபுரத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். 

பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் ஆதரவு பெற்ற அதிமுக- அசத்தும் கருத்துக் கணிப்பு!

வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி பல்வேறு கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஓட்டு போட்டா கர்ஜிப்பேன், போடலைன்னா சின்னதா குரல் கொடுப்பேன்: தமிழ் நடிகையின் பிரச்சாரம்!

எனக்கு ஓட்டு போட்டால் சட்டமன்றத்தில் உங்களுக்காக கர்ஜிப்பேன் என்றும் ஓட்டு போடவில்லை என்றால் சின்னதாக குரல் கொடுப்பேன் என்றும் தமிழ் நடிகை ஒருவர் மக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார்.