close
Choose your channels
evp_raaga
kappan_us

தல அஜித்துக்கு கிடைத்த மேலும் ஒரு கெளரவம்!

Wednesday, August 21, 2019 • தமிழ் Comments

தல அஜித் நடிகராக மட்டுமின்றி கார் ரேஸ், மோட்டார் சைக்கிள் ரேஸ், சமையல், ஆளில்லா விமானம் தயாரிப்பு என பல்வேறு துறைகளில் பெயர் பெற்றவர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார் என்பதையும், வரும் டிசம்பர் மாதம் மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியிலும் அவர் பங்கு பெற உள்ளார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித்துக்கு சென்னை ரைபிள் கிளப் சான்றிதழ் அளித்து கெளரவித்துள்ளது. அஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சான்றிதழ் குறித்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் சான்றிதழ் புகைப்படத்துடன் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz