தல அஜித்தின் 'சிட்டிசன்' இயக்குனரின் அடுத்த படம்: டிரைலர் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Friday,October 15 2021]

தல அஜித் நடித்த ‘சிட்டிசன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஷரவணன் சுப்பையா இயக்கியுள்ள ’மீண்டும்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

தல அஜித், மீனா, வசுந்தரா தாஸ், நக்மா உள்பட பலர் நடித்த ‘சிட்டிசன்’ மற்றும் ஷாம், சினேகா நடித்த ‘ஏபிசிடி’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சரவண சுப்பையா. இவர் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்கியுள்ள திரைப்படம் ’மீண்டும்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தபடத்தில் கதிரவன், ஷரவணன் சுப்பையா, அனைகா, சுப்பிரமணிய சிவா, யார் கண்ணன், துரை சுதாகர், உள்பட பலர் நடித்துள்ளனர். நரேன் பாலகுமார் இசையில், வைரமுத்து பாடல் வரிகளில், ஸ்ரீனிவாசன் தெய்வாம்சம் ஒளிப்பதிவில், ராஜாமுகமது படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் டிரைலரில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது ஷரவணன் சுப்பையாவின் ‘சிட்டிசன்’ போலவே விறுவிறுப்பான திரில்லர் கதையம்சம் கொண்டது என்பது தெரிய வைக்கிறது. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரமிக்க வைக்கும் சுந்தர்பிச்சையின் தினசரி வழக்கம் பற்றி தெரியுமா?

உலகிலுள்ள கோடிக்கணக்கான மனிதர்களுக்கு இடையில் சாதனையாளர்கள்

தனுஷ்-செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்தின் சூப்பர் அப்டேட் கலைப்புலி எஸ்.தாணு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' மற்றும் கார்த்திக் நரேன் இயக்கும் 'மாறன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

தோனியை வித்தியாசமாகப் பாராட்டிய கல்லூரி மாணவி… ரசிகர்கள் வரவேற்பு!

சென்னை சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனியின் உருவப்படத்தை கோலமாவு கொண்டு

நிர்வாணமாகக் காட்டும் கண்ணாடியா? ஆச்சர்யத்தில் ஒரு லட்சத்தை இழந்த இளைஞர்!

கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் தேனியைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று காண்போரை நிர்வாணமாகக் காட்டும்

த்ரிஷாவின் அடுத்த படம் குறித்த ஆச்சரியமான தகவல்!

தமிழ் திரை உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷா தற்போதும் கூட இளம் நடிகைகளுக்கு இணையாக சுமார் ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.