close
Choose your channels

தாஜ்மஹாலில் தல அஜித்: வைரலாகும் தாறுமாறான புகைப்படங்கள்! 

Sunday, September 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தாஜ்மஹாலில் தல அஜித் ரசிகர்களுடன் இருக்கும் தாறுமாறான புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் முடிவடைந்தது என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு பைக்ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஜீத் சமீபத்தில் சென்னை திரும்பினார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் தல அஜித் டெல்லி சென்றார். இந்த போட்டியின் பயிற்சியின் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் அஜித், தாஜ்மகாலை சுற்றி பார்க்க சென்றதாகவும் அப்போது அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் நடைபெற உள்ள துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி முடிந்தவுடன் சென்னை திரும்பும் தல அஜீத், அடுத்த படத்திற்கான வேலையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத் இயக்க உள்ளார் என்பதும் போனிகபூர் தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.