'வலிமை' ரிலீஸ் தேதியை அறிவித்தார் போனிகபூர்!

தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் தீபாவளிக்கு வெளிவரும் என்றும் கிறிஸ்மஸ் தினத்தில் வெளிவரும் என்றும் பல செய்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் ’வலிமை’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை சற்றுமுன் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

’வலிமை’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் ’வலிமை’ படம் ரிலீசுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டது. இருப்பினும் ’வலிமை’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவின் நாளை வெளியாக இருப்பதாகவும் அந்த வீடியோவில் அஜித்தின் பைக் ஸ்டன்ட் காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ள இந்த படத்தில் கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.

More News

குழந்தை டயப்பருடன் பஞ்சாப் அணியை மோசமாக ஒப்பிட்ட முன்னாள் வீரர் … என்ன காரணம்?

இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பஞ்சாப் கிங்ஸ் அணியை பார்த்து “குழந்தை கூட தனது டயப்பரை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்காது“

விஜய்சேதுபதியிடம் இருந்து அதிகம் கற்று கொண்டேன்: பிரபல கிரிக்கெட் வீரர்!

விஜய் சேதுபதியிடம் இருந்து அதிகம் கற்றுக் கொண்டதாக பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளை 'வலிமை' படத்தின் அப்டேட் இருக்கு, ஆனால்...

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படம் தீபாவளி அல்லது கிறிஸ்மஸ் ஆகிய இரண்டு தினங்களில் ஒன்றில் வெளியாக அதிக

இளையராஜாவின் 1417வது படத்தின் டைட்டில் அறிவிப்பு!

இசைஞானி இளையராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே. ஒரு படத்திற்கு சராசரியாக 5 பாடல்கள் என்று வைத்துக் கொண்டாலும்

விபத்தில் சிக்கிய மணிமேகலை: நடந்தது என்ன?

விஜய் டிவி தொகுப்பாளினி மணிமேகலைக்கு ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு கார் விபத்து நிகழ்ந்த நிலையில் தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு கார் விபத்து நிகழ்ந்த சம்பவம் ரசிகர்கள்