close
Choose your channels

'வலிமை' ரிலீஸ் தேதியை அறிவித்தார் போனிகபூர்!

Wednesday, September 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் தீபாவளிக்கு வெளிவரும் என்றும் கிறிஸ்மஸ் தினத்தில் வெளிவரும் என்றும் பல செய்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் ’வலிமை’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை சற்றுமுன் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

’வலிமை’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் ’வலிமை’ படம் ரிலீசுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டது. இருப்பினும் ’வலிமை’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவின் நாளை வெளியாக இருப்பதாகவும் அந்த வீடியோவில் அஜித்தின் பைக் ஸ்டன்ட் காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ள இந்த படத்தில் கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.