'வலிமை' டீசர் ரிலீஸ் குறித்த ஹேஷ்டேக் டிரெண்டிங்!

  • IndiaGlitz, [Wednesday,September 15 2021]

தல அஜித் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீஸர் ரிலீஸ் தேதி ஆகியவை குறித்த தகவல்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் திடீரென சமூக வலைதளங்களில் ’வலிமை’ டீசர் தேதி குறித்த ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ’வலிமை’ படத்தின் டீஸர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாக உள்ளதாக அஜித் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்ததை அடுத்து ’வலிமை’ டீசர் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகியுள்ளது. ஆனால் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழுவினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் இதற்கு முந்தைய ’வலிமை’ படத்தின் புரமோஷன்கள் அனைத்தும் முன்னறிவிப்பின்றி திடீரென வெளிவந்தது என்பதால் ’வலிமை’ படத்தின் டீசரும் அதேபோல் இன்று வெளிவர வாய்ப்பு இருப்பதாக அஜித் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அஜித் ரசிகர்களின் நம்பிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஒற்றைக்காலில் நின்று கொண்டு வொர்க்-அவுட் செய்யும் லெஜண்ட் சரவணன் பட நாயகி!

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அவர்கள் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

நான் கந்துவட்டி கேட்டேனா? சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை விளக்கம்

பாஜகவில் சமீபத்தில் இணைந்த தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஜெயலட்சுமி மீது கந்துவட்டி புகார் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

'அரண்மனை 3' படத்தில் இணைந்த உதயநிதி: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவான 'அரண்மனை 3' என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்றும், விரைவில் வரவுள்ள திருவிழா தேதியில் இந்த படம் ரிலீசாகும்

ஸ்விகி, சோமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!

ஏற்கனவே உணவகங்களில் உண்ணும்போது நாம் சாப்பிடும் ஒவ்வொரு பொருளுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்தி வருகிறோம்.