close
Choose your channels

வாஹா எல்லையில் தல அஜித்: வைரல் புகைப்படங்கள்!

Wednesday, October 20, 2021 • தமிழ் Comments

இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாஹா எல்லையில் தல அஜித் ரசிகர்கள் மற்றும் ராணுவ வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தல அஜித் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் தற்போது அடுத்த படத்திற்கு அவர் தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அஜித் வட இந்திய சுற்றுப்பயணம் செய்ததாக தகவல் வெளிவந்தது என்பதும் அங்கு ரசிகர்களுடன் அவர் எடுத்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய பாகிஸ்தான் எல்லையான புகழ்பெற்ற வாஹா என்ற பகுதியில் தல அஜித் சென்றுள்ளார். அங்கு இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz