தல அஜித்தின் 'விவேகம்': வேற லெவல் டீசர்

  • IndiaGlitz, [Thursday,May 11 2017]

'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்தபோது அவரது சிக்ஸ்பேக் உடலை போட்டோஷாப் என்று கூறியவர்கள் இந்த டீசரை பார்த்தவுடன் தாங்கள் கூறியது தவறு என்பதை ஒப்புக்கொள்வர். அந்த அளவுக்கு ஸ்லிம் உடலமைப்புடன், ஸ்டைலிஷாக இருக்கின்றார் அஜித்

உண்மையில் இது தமிழ்ப் படத்தின் டீசர் தானா? அல்லது ஹாலிவுட்டின் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் டீசரா? என்று சந்தேகிக்கும் அளவில், ஒவ்வொரு காட்சியிலும் ரிச்னெஸ் தெரிகிறது.

மேலும் நமது IndiaGlitz ஏற்கனவே கூறிய பஞ்ச் டயலாக் ஆன 'இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்டா..தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு சொன்னாலும், நீயா ஒத்துக்கற வரைக்கும் எவனாலும், எங்கேயும் எப்பவும் உன்னை யாராலும் ஜெயிக்க முடியாது' என்ற பஞ்ச டயலாக் இடம் பெறும் காட்சி அட்டகாசத்தின் உச்சம் என்றே கூறலாம். மேலும் இந்த பஞ்ச் டயலாக்கின் ஒவ்வொரு வார்த்தையின்போதும் ஒவ்வொரு ஆக்சன் காட்சிகள் தெறிக்க வைக்கின்றது. மரத்தை ஆக்ரோஷத்துடன் உடைக்கும் அஜித், பைக்கில் பறந்து கொண்டே துப்பாக்கி எடுத்து சுடும் அஜித்தின் ஸ்டைலிஷ் காட்சி ஆகியவை தல ரசிகர்களுக்கு கிடைத்த செம விருந்து காட்சிகள்

அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசை, வெற்றியின் ஹாலிவுட் தரத்தில் கேமிரா, ரூபனின் கச்சிதமான எடிட்டிங், சிவாவின் வேற லெவல் இயக்கம் ஆகியவை ஒருங்கே அமைந்துள்ளதால் 2017ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் படம் ரெடியாகிவிட்டது என்றே கூற தோன்றுகிறது.

மொத்தத்தில் 'விவேகம்' டீசர் வேற லெவலான ஒரு புயல் என்றுதான் கூற வேண்டும்

More News

தல அஜித்தின் 'விவேகம்': வேற லெவல் டீசர்

'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்தபோது அவரது சிக்ஸ்பேக் உடலை போட்டோஷாப் என்று கூறியவர்கள் இந்த டீசரை பார்த்தவுடன் தாங்கள் கூறியது தவறு என்பதை ஒப்புக்கொள்வர். அந்த அளவுக்கு ஸ்லிம் உடலமைப்புடன், ஸ்டைலிஷாக இருக்கின்றார் அஜித்

ரூ.500 கோடி பட்ஜெட்டில் 3Dயில் 'இராமாயணம்'. பாகுபலி கொடுத்த தைரியமா?

நல்ல கதை, சிறந்த திரைக்கதை, கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நட்சத்திரங்கள், கடுமையான அர்ப்பணிப்புள்ள உழைப்பு ஆகியவை இருந்தால் எத்தனை கோடி செலவு செய்து திரைப்படம் எடுத்தாலும் அதைவிட பலமடங்கு லாபம் பார்க்கலாம் என்பதை நிரூபித்தது எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' பட டீம்

ரவீந்திரநாத் தாகூர் வாழ்க்கையை படமாக்கும் பிரபல நடிகை

கோலிவுட்டில் விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் திரையுலக வாழ்க்கையை தொடங்கிய பிரியங்கா சோப்ரா அதன் பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக உள்ளார்.

பொன்னியின் செல்வன்' கேரக்டர்களுக்கு பொருத்தமானவர் யார்?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி, 'பாகுபலி 2' ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியை அடுத்து பெரிய இயக்குனர்களின் பார்வை சரித்திர படங்களின் பக்கம் திரும்பியுள்ளது.

அஜித், விஜய்யை அடுத்து ஐரோப்பா செல்லும் தனுஷ்

தல அஜித் தற்போது நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பிற்காக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவில் உள்ளார்.