நெகட்டிவ் விமர்சனத்தை மீறி 2வது நாளில் சாதனை செய்த 'விவேகம்'

  • IndiaGlitz, [Saturday,August 26 2017]

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் வெளியாகியது. இந்த படம் உலக தரத்தில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் திரைக்கதை சுமாராக இருப்பதாக பல ஊடகங்கள் விமர்சனங்கள் செய்தது. மேலும் ஒருசிலர் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களையும் தந்துள்ளனர்.

இந்த நிலையில் நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி இந்த படம் முதல் நாள் வசூலைவிட அதிகமாக இரண்டாவது நாள் வசூல் செய்துள்ளது. ஒரு படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்தால் இரண்டாவது காட்சியிலேயே வசூல் குறைந்துவிடும் நிலையில் இந்த படத்திற்கு இரண்டாவது நாளில் வசூல் அதிகரித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

சென்னையில் 'விவேகம்' திரைப்படம் முதல் நாளில் ரூ.1.21 கோடி வசூல் செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நேற்றைய இரண்டாவது நாளில் இந்த படம் ரூ.1.51 கோடி வசூல் செய்துள்ளது. நெகட்டிவ் விமர்சனத்தை மீறி ரூ.30 லட்சம் இரண்டாவது நாளில் அதிகம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களின் வசூல் ரூ.5 கோடியை தொட்டுவிட வாய்ப்பு இருப்பதாகவும் விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

More News

பிரபல நகைச்சுவை நடிகருக்க்கு அதிமுகவில் புதிய பதவி

அதிமுகவில் இருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர் மூன்றாவது அணியாக செயல்பட்டு வரும் தினகரன் அணியினர், அதிமுகவின் இரு அணி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புளூசர்ட் மாறன் மீது நடவடிக்கை எடுங்கள்: ராகவா லாரன்ஸ்

அஜித் நடித்த 'விவேகம்' படம் குறித்தும் இந்த படத்தை மோசமாக விமர்சனம் செய்த புளூசர்ட் மாறன் குறித்தும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது:

கமல்ஹாசன் கண்டுபிடித்த அந்த குற்றவாளி யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்வையாளர்கள் பலர் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டார்கள்.

ஓவியா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம் ஆரம்பமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றுவிட்ட ஓவியாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை ஓவியா ஆர்மியினர், ஓவியா புரட்சி படையினர் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

'விவேகம்', 'மெர்சல்' படக்குழுவினர்களின் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை

சினிமா என்பது கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்படும் ஒரு தொழில் மட்டுமின்றி அதில் ஆயிரக்கணக்கான மனித உழைப்பும் இருக்கின்றது என்பதை கூட அறியாமல் ஒருசில பெய்டு விமர்சகர்கள் ஒருசில ஆயிரங்களுக்காக முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் நெகட்டிவ் விமர்சனம் செய்து படத்தின் போக்கை மாற்றிவிடுகின்றனர்.