அஜித் தான் இதற்கு முழு காரணம். சாந்தனு பாக்யராஜ்

  • IndiaGlitz, [Thursday,February 23 2017]

கோலிவுட் திரையுலகில் அறிமுக நடிகர், நடிகைகளும், வளர்ந்து வரும் நட்சத்திரங்களும் தங்கள் படங்களின் ரிலீசின்போது அஜித் குறித்து ஏதாவது சொல்லி தங்கள் படங்களுக்கு புரமோஷன் செய்வதை வழக்கமாகி கொண்டுள்ளனர். பல படங்களில் அஜித் நடிக்கவில்லை என்றாலும் அவரது பெயரை வைத்துதான் புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 3ஆம் தேதி சாந்தனு பாக்யராஜின் 'முப்பரிமாணம்' வெளியாகவுள்ள நிலையில் அஜித் குறித்த ஒரு தகவலை சாந்தனு தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
இந்த படத்தில் ஒரு கார் சேசிங் காட்சி உள்ளதாகவும், அந்த காட்சி சிறப்பாக அமைய அஜித் நடித்த படங்களின் கார் சேசிங் காட்சிகள் உத்வேகமாக இருந்ததாகவும் சாந்தனு கூறியுள்ளார்.
சாந்தனு, ஸ்ருஷ்டி டாங்கே, தம்பிராமையா, அப்புக்குட்டி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அதிரூபன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில், ராசாமதி ஒளிப்பதிவில் விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

More News

ஜெயலலிதா சிலை திறக்க பரோலில் வருகிறாரா சசிகலா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் நாளை அதிமுகவினர்களால் கொண்டாடப்பட உள்ளது. ஜெயலலிதா மறைந்த பின்னர் வரும் முதல் பிறந்த நாள் என்பதால் இந்த வருட பிறந்த நாளை அதிமுக அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாட அதிமுகவினர் தயாராகி வருகின்றனர்...

விஜய் ஆண்டனியின் 'எமன்'. திரை முன்னோட்டம்

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ஹீரோவாக மாறி 'நான்', 'சலீம்', 'இந்தியா பாகிஸ்தான்', 'பிச்சைக்காரன்' மற்றும் 'சைத்தான்' ஆகிய தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்

ராகவா லாரன்ஸின் 'சிவலிங்கா' ரிலீஸ் தேதி

ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்டசிவா கெட்டசிவா' மற்றும் 'சிவலிங்கா' ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என்று ஒருசில நாட்களுக்கு முன்னர் செய்திகள் உலா வந்தது. ஆனால் தற்போது 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் மட்டும் வரும் வெள்ளியன்று அதாவது பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 'சிவலிங்கா' படத்தின் 

அஜித்துக்கு வாழ்த்து கூறிய பாகுபலி நடிகர்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் விரைவில் பல்கேரியா செல்லவுள்ளனர்...

ஆளுனரின் விரிவான அறிக்கை. ஜனாதிபதி கையில் தமிழக அரசின் எதிர்காலம்

கடந்த 18ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வரலாறு காணாத அமளி ஏற்பட்டது. திமுக உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு நடந்த வாக்கெடுப்பில் முதல்வர் பழனிச்சாமியின் அரசு வெற்றி பெற்றபோதிலும் அரியணைக்கு மேல் இன்னும் கத்தி தொங்கி கொண்டே உள்ளது...