அஜித்தின் 'விவேகம்' டீசர்: 11 மணி நேரத்தில் 22.5 லட்சம் பார்வையாளர்கள்

  • IndiaGlitz, [Thursday,May 11 2017]

அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் டீசர் நேற்று நள்ளிரவில் வெளியாகி அஜித் ரசிகர்களின் விடாத முயற்சியால் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து கொண்டே வருகிறது.
'விவேகம்' டீசர் வெளியாகி தற்போது 11 மணி நேரம் ஆகியுள்ள நிலையில் இதுவரை இந்த டீசரை 22 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். மேலும் 2 லட்சத்து 25 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளது. இந்த எண்ணிக்கை தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
விவேகம் டீசரை அஜித் ரசிகர்கள் பலரும் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருவதாகவும், இவ்வாறு நடந்திருக்காவிட்டால் யூடியூபில் 'விவேகம்' டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் 'விவேகம்' டீசர் அமைந்திருந்ததால், அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

More News

நாளை முதல்வருடன் சந்திப்பு: திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் தவிர்க்கப்படுமா?

சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால், மத்திய,மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

அஜித்தின் 'விவேகம்' டீசருக்கு பாராட்டுக்களை குவிக்கும் கோலிவுட் பிரபலங்கள்

தல அஜித்தின் அட்டகாசமான 'விவேகம்' படத்தின் டீசர் நேற்றிரவு சரியாக 12.01 மணிக்கு வெளியாகி சமூக வலைத்தளங்களை புரட்டி போட்டது.

தல அஜித்தின் 'விவேகம்': வேற லெவல் டீசர்

'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்தபோது அவரது சிக்ஸ்பேக் உடலை போட்டோஷாப் என்று கூறியவர்கள் இந்த டீசரை பார்த்தவுடன் தாங்கள் கூறியது தவறு என்பதை ஒப்புக்கொள்வர்.

தல அஜித்தின் 'விவேகம்': வேற லெவல் டீசர்

'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்தபோது அவரது சிக்ஸ்பேக் உடலை போட்டோஷாப் என்று கூறியவர்கள் இந்த டீசரை பார்த்தவுடன் தாங்கள் கூறியது தவறு என்பதை ஒப்புக்கொள்வர். அந்த அளவுக்கு ஸ்லிம் உடலமைப்புடன், ஸ்டைலிஷாக இருக்கின்றார் அஜித்

ரூ.500 கோடி பட்ஜெட்டில் 3Dயில் 'இராமாயணம்'. பாகுபலி கொடுத்த தைரியமா?

நல்ல கதை, சிறந்த திரைக்கதை, கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நட்சத்திரங்கள், கடுமையான அர்ப்பணிப்புள்ள உழைப்பு ஆகியவை இருந்தால் எத்தனை கோடி செலவு செய்து திரைப்படம் எடுத்தாலும் அதைவிட பலமடங்கு லாபம் பார்க்கலாம் என்பதை நிரூபித்தது எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' பட டீம்