'விவேகம்' டீசர் சாதனை குறித்து Forbes பத்திரிகையில் செய்தி

  • IndiaGlitz, [Thursday,May 11 2017]

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான 'பாகுபலி 2' என்ற தென்னிந்திய திரைப்படம் உலகின் கவனத்தை ஈர்த்த நிலையில் நேற்று நள்ளிரவு வெளியான 'விவேகம்' படத்தின் டீசர் சாதனை மீண்டும் உலகையே தென்னிந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் முன்னணி பிசினஸ் பத்திரிகையான Forbes பத்திரிகையில் 'விவேகம்' குறித்த செய்தி வெளிவந்துள்ளது.
நள்ளிரவு 12 மணிக்கு வெளியான 'விவேகம்' படத்தின் டீசர் வெறும் 12 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்றும் இந்த சாதனை இதற்கு முந்தைய தென்னிந்திய படமான 'கபாலி' படத்தின் சாதனையை தகர்த்துள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'தல' என்று அவரது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் அஜித்தின் 'விவேகம்' படத்தின் டீசரை அவரது படைவீரர்கள் இடைவிடாமல் பார்த்து இந்த சாதனையை செய்துள்ளனர் என்றும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. மேலும் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இணையாக உள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளிவரவுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கின்றது.
உலகின் முன்னணி Forbes பத்திரிகையில் தல அஜித்தின் 'விவேகம்' செய்தி வெளிவந்துள்ளது குறித்த செய்தி தெரிய வந்ததும் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லையில் உள்ளனர்.

More News

விஜய் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார்

பெரிய நடிகர்கள் மீது விளம்பரத்திற்காக அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக அவ்வப்போது நீதிமன்றத்தில் வழக்கு, காவல்துறையில் புகார் ஆகியவை நடைபெற்று வருவதுண்டு

ஓடி ஒளியவில்லை. சென்னையில்தான் இருக்கின்றார். நீதிபதி கர்ணன் வழக்கறிஞர் மனுதாக்கல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தா நீதிபதி கர்ணன் சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்த நிலையில் அவரை மனநல சோதனைக்கு உட்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

22 வருடங்களுக்கு பின் 'அமிதாப்' கனவை நனவாக்கிய குஷ்பு

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான குஷ்பு தற்போது கணவர் மற்றும் மகள்களுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளார்.

அஜித்தின் 'விவேகம்' டீசர்: 11 மணி நேரத்தில் 22.5 லட்சம் பார்வையாளர்கள்

அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் டீசர் நேற்று நள்ளிரவில் வெளியாகி அஜித் ரசிகர்களின் விடாத முயற்சியால் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து கொண்டே வருகிறது

நாளை முதல்வருடன் சந்திப்பு: திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் தவிர்க்கப்படுமா?

சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால், மத்திய,மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார்.