'விவேகம்' படத்தின் 15 நாள் வெற்றி வசூல் விபரங்கள்

  • IndiaGlitz, [Monday,September 11 2017]

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்திற்கு ரிலீஸ் தேதியில் இருந்தே நாலாபக்கத்திலும் இருந்து நெகட்டிவ் ரிசல்ட்டுக்கள் குவிந்தன. ஆனால் இரண்டாவது வாரத்தை கடந்து மூன்றாவது வாரத்திலும் இந்த ப்டம் வசூலை பெற்று வருவதை கண்டு நெகட்டிவ் ரிசல்ட்டை கொடுத்தவர்களே தற்போது வசூல் சாதனையை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் 'விவேகம்' திரைப்படம் வெளியான 15 தினங்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.66 கோடியை வசூல் செய்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டில் 'பாகுபலி 2' படத்தை அடுத்து அதிகபட்சமாக வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெருமையை 'விவேகம்' பெற்றுள்ளது.

இந்த படம் சென்னையில் ரூ.9.47 கோடியும், நெல்லை-குமரி பகுதியில் ரூ.2.75 கோடியும், சேலத்தில் ரூ.6.1 கோடியும், கோவையில் சுமார் ரூ.11 கோடியும்,  வசூல் செய்துள்ளது. மேலும் இன்னும் இந்த படம் ஓடிக்கொண்டிருக்கும் திரையரங்குகளில் சராசரியாக 70% பார்வையாளர்கள் வந்து கொண்டிருப்பதால் அடுத்த வாரமும் இந்த படம் பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிகிறது.

More News

ஜிமிக்கி கம்மல் டான்ஸ் ஷெரிலுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா?

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய், ஓவியா டிரெண்டுகளுக்கு இணையாக டிரெண்ட் ஆன ஒரு விஷயம் ஜிம்மி கம்மல் வீடியோ.

சூர்யா- ஜோதிகா: ஜில்லுன்னு ஒரு காதல்

கோலிவுட் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளுக்கு பஞ்சமில்லை.

'கதாநாயகன்', 'நெருப்புடா' ஓப்பனிங் வசூல் விபரம்

விஷ்ணுவின் 'கதாநாயகன்' மற்றும் விக்ரம் பிரபுவின் 'நெருப்புடா' ஆகிய இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அனிதா தங்கையா? தலித்தா? ரஞ்சித்துக்கு சீமான் கேள்வி

சமீபத்தில் இயக்குனர் சங்கம் நடத்திய அனிதாவின் நிகழ்வேந்தல் நிகழ்ச்சியில் இயக்குனர் அமீருக்கும், இயக்குனர் ரஞ்சித்துக்கும் ஜாதி, தமிழ் குறித்து காரசாரமான விவாதம் நடந்தது அனைவரும் அறிந்ததே.

அனிதா குடும்பத்திற்கு விஜய் கொடுத்த வாக்குறுதி

சமீபத்தில் நிகழ்ந்த மிகத்துயரமான சம்பவமான அனிதாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. 1176 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவிக்கு தான் விரும்பிய மெடிக்கல் படிப்பை படிக்க இடமில்லை