'விவேகம்' அஜித்தை வேற லெவலுக்கு கொண்டு செல்லும். சிறுத்தை சிவா

  • IndiaGlitz, [Wednesday,May 17 2017]

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழுவினர் ஐரோப்பாவில் இருந்து சென்னை திரும்பிவிட்டனர். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் ஒருபுறமும், இன்னொரு புறம் இந்த படத்தின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை திரும்பிய படக்குழுவினர் படத்தின் ரஷ்ஷை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளார்களாம். எதிர்பார்த்ததை விட படம் சூப்பராக வந்துள்ளதாகவும், நிச்சயம் இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்றும் கூறி வருகின்றார்கள்

இயக்குனர் சிறுத்தை சிவா 'விவேகம்' படத்திற்கு முன்னர் அஜித் நடித்த 'வீரம்' மற்றும் 'வேதாளம்' ஆகிய படங்களை இயக்கியிருந்தாலும் முந்தைய படங்களின் சாயல் சிறிதுகூட இல்லாமல் இந்த படத்தை இயக்கியுள்ளாராம். இதுவரை சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டு வரும் அவர் இந்த படம் வெளிவந்த பின்னர் 'விவேகம்' சிவா என்று அழைக்கப்படுவார் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் கூ'றி வருகின்றனர்.

அதேபோல் அஜித் இதுவரை நடித்துள்ள 56 படங்களின் சாயல் சிறிதுகூட இந்த படத்தில் இருக்காது என்றும், இந்த படம் அஜித்தை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என்றும் இயக்குனர் சிவா தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

அட்லி-ஜீவாவின் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. திரை முன்னோட்டம்

'ராஜா ராணி' மற்றும் 'தெறி' என இரண்டே படங்கள் இயக்கிய இயக்குனர் அட்லி, தனது உதவியாளரை இயக்குனராக்கி அழகுபார்க்கவே தயாரித்துள்ள திரைப்படம் தான் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'.

ரூ.500 கோடி படத்தின் நாயகன் இவரா? போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி ரூ.1500 கோடி வசூலை நெருங்கி கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் வசூல் கொடுத்த தைரியம் காரணமாக இந்தியாவில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்...

விக்ரம்-ஹரியின் 'சாமி 2' இசையமைப்பாளர் அறிவிப்பு

சீயான் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கிய 'சாமி' திரைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 14 வருடங்களுக்கு பின்னர் உருவாகவுள்ளது...

பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும்! போக்குவரத்து ஊழியர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.