பீஸ்ட் படப்பிடிப்பில் தல தோனி? நடிகர் விஜய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,August 12 2021]

கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் தற்போது மீண்டும் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்தோனி, தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கியுள்ளார். கூடவே அவர் சென்னையை சுற்றிப் பார்த்தும் வருகிறார்.

அந்த வகையில் சென்னை பூந்தமல்லியில் நடைபெற்றுவரும் “பீஸ்ட்” படத்தின் படப்பிடிப்பிற்கு தல தோனி அவர்கள் திடீர் விசிட் அடித்துள்ளார். மேலும் அங்குப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய்யுடன் அவர் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்- கேப்டன் தோனி இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் “வாத்திகளின் சந்திப்பு“ என்ற பெயரில் அதை வைரலாக்கி வருகின்றனர். மேலும் Dhoni meets Vijai# என்ற பெயரில் இந்தப் புகைப்படங்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளில் தற்போது மீண்டும் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை தனி விமானம் மூலம் ஐக்கிய அமீரகம் நோக்கி படையெடுக்க உள்ளனர். இந்நிலையில் தல தோனி சென்னையை சுற்றிப்பார்த்து வருகிறார்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அங்கு திடீர் விசிட் அடித்த தல தோனி நடிகர் விஜய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அந்தக் காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

'வலிமை' அப்டேட், 'மாநாடு' அப்டேட்: டபுள் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு!

'வலிமை' அப்டேட் மற்றும் 'மாநாடு' அப்டேட் என இரண்டு அப்டேட்களின் தகவல்களை வெங்கட்பிரபு கூறியதை அடுத்து அஜித் மற்றும் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர். 

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் அஸ்வின்...! 6 கதாநாயகிகள் கொண்ட படத்தில்....?

குக் வித் கோமாளி அஸ்வின் 'மீட் க்யூட்' என்ற புதிய ஆந்தாலஜி மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்

பீஸ்ட் படத்தின் ஹாட் அப்டேட்.....! தளபதியுடன் இணைந்த சிவகார்த்திகேயன்....!

அண்மையில் தான் பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டர்கள்

புதுவகை மோசடி திருடர்கள்? வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

வாடிக்கையாளர்களின் செல்போனிற்கு எஸ்.எம்.எஸ் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி அதன்வழியாக வங்கி விவரங்களை சேகரிக்கும் ஒரு புதுவகை திருட்டு அதிகரித்து இருப்பதாக சைபர் குற்றப்பிரிவு எச்சரித்துள்ளது.

அறிமுக இயக்குனர் படம்.....! பிரபல இசையமைப்பாளருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்....!

அறிமுக இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்