களை கட்டியது ஐபிஎல் திருவிழா: சென்னை வந்த தல தோனிக்கு விசில் போடும் வீடியோ!
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகளின் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டி விரைவில் தொடங்க உள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்றும், விரைவில் ஐபிஎல் போட்டிகள் குறித்த அட்டவணையும் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் தற்போது சென்னைக்கு வருகை தர தொடங்கிவிட்டதால் ரசிகர்கள் விசில் போட்டு அவர்களை வரவேறு வருகின்றனர். நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி சென்னை வந்ததை அடுத்து அவருக்கு சிஎஸ்கே அணி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
தல தோனியின் சென்னை வருகையை அடுத்து ‘விசில் போடுங்க’ என்ற பாடலுடன் கூடிய ஒரு வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தல தோனி சென்னை வந்து இறங்கும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தோனியை அடுத்து அம்பத்தி ராயுடுவும் சென்னைக்கு வந்துள்ளார் என்பதும் விரைவில் மற்ற வீரர்களும் சென்னைக்கு வரவுள்ளனர் என்பதால் ஐபிஎல் போட்டி களைகட்ட தொடங்கிவிட்டது
The Singa Nadai to start off the day with! Thala Coming! #DenComing #WhistlePodu #Yellove ???? @msdhoni pic.twitter.com/nu6XOmJ8qo
— Chennai Super Kings (@ChennaiIPL) March 4, 2021