'தலைவர் 168' படத்தின் டைட்டில் இதுவா? கமல் ரசிகர்கள் கொண்டாட்டம்

  • IndiaGlitz, [Thursday,January 23 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ’தலைவர் 168’ இந்த படத்தில் மீனா, குஷ்பு,கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முடிவடைந்தது என்பதும், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’மன்னவன்’ என்று இருக்கலாம் என்று நேற்று செய்திகள் கசிந்தது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் ’மன்னவன்’ என்ற பட போஸ்டரை டிசைன் செய்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கினர்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் டைட்டில் ’அண்ணாத்த’ என்று கூறப்படுகிறது. கமலஹாசன் நடித்த ’அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ’அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ’ என்ற பாடல் இருப்பதால் கமலஹாசன் பாடல் வரியே ரஜினி படத்தின் டைட்டிலாக வருவதால் கமல் ரசிகர்கள் இந்த டைட்டிலை கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் ’தலைவர் 168’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்
 

More News

நடிகர் சங்க தேர்தல் வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் சம்மந்தப்பட்ட வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் இருப்பதால்

வீடியோ கேம் விளையாடி 3 மில்லியன் டாலர் ஜெயித்த இளைஞர்!

16 வயது இளைஞர் ஒருவர் வீடியோ கேம் விளையாடி மூன்று மில்லியன் டாலர் வெற்றி பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்திய சுதந்திரப் போருக்கு புது ரத்தம் பாய்ச்சிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் இன்று (23 ஜனவரி, 1897)

இந்தியாவின் சாகச போர் வீரன், எப்போதும் அழியா சரித்திரம்,

'சூரரை போற்று' படத்தின் லேட்டஸ்ட் அட்டகாசமான அப்டேட்

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிவரும் 'சூரரைப்போற்று' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து

4ஆம் வகுப்பு மாணவன் எழுதிய 'அப்பா' கட்டுரை: குடும்பத்தையே தலைகீழாக மாற்றிய அதிசயம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்காம் வகுப்பு மாணவன் ஒருவன் எழுதிய 'அப்பா' குறித்த கட்டுரை அம்மாநில அமைச்சரை நெகிழ்ச்சி அடையச் செய்ததோடு, அந்த மாணவனின் குடும்பத்திற்கு