'தலைவர் 171' படத்தில் ரஜினியின் கேரக்டர் இதுவா? மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,March 31 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’தலைவர் 171’ . இந்த படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் தங்கத்தினால் ஆன கைவிலங்கை ரஜினிகாந்த் போட்டிருக்கும் நிலையில் பல்வேறு கதைகள் யூகம் செய்யப்பட்டது. மேலும் பின்னணியில் கடிகார வடிவமைப்பு இருந்ததை அடுத்து இந்த படம் டைம் ட்ராவல் படமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் ரஜினிகாந்த் தங்கத்தை கடத்தும் ஒரு கடத்தல்காரர் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் கதை குறித்து சமீபத்தில் லோகேஷ் கனகராஜிடம் கேட்டபோது ’ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள், ஆனால் நாங்கள் வேற மாதிரி எழுதி வைத்திருக்கிறோம் என்று கூறிய நிலையில் அவருடைய வேற மாதிரி எழுத்து என்பது தங்கக் கடத்தல்காரன் கதையா என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

மொத்தத்தில் ரஜினிகாந்த் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படமும் அதே போல் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

40 வருட சினிமா பயணங்களில் இருந்து ஒரு சில பக்கங்களை பகிர்ந்த கோவை சரளா .

தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரம்மாவிற்கு பிறகு நகைச்சுவையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் கோவை சரளா 1962ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி கோவையில் பிறந்தார்...

முதல்முறையாக நயன் குழந்தைகளுக்கு கிடைத்த அனுபவம்.. க்யூட் வீடியோ வைரல்..!

நடிகை நயன்தாராவின் குழந்தைகளுக்கு முதல் முறையாக கிடைத்த அனுபவம் குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

'விக்ரம்' படத்தில் ஒரு ரோலக்ஸ் சூர்யா போல்.. 'தலைவர் 171' படத்தில் இந்த மாஸ் நடிகரா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' படத்தில் கடைசி ஐந்து நிமிடங்கள் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் வந்து சூர்யா மிரட்டிய நிலையில்   'தலைவர் 171' படத்திலும் ஒரு மாஸ்

'ஜிகர்தண்டா 2' வெற்றியினால் கார்த்திக் சுப்புராஜ்-க்கு கிடைத்த வாய்ப்பா? 'சூர்யா 44' படத்தின் மாஸ் தகவல்..!

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் 'சூர்யா 44' என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் சூர்யா ரசிகர்களுக்கே இது பெரும் ஆச்சரியமாக இருந்தது

'துப்பாக்கி' வில்லனை களமிறக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்.. 'எஸ்கே 23' படமும் அதே போல் இருக்குமா?

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும்  'எஸ்.கே 23' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில்