close
Choose your channels

தலைவர், தல ஆட்டம்: கார்த்திக் சுப்புராஜை வறுத்தெடுத்த 'தல' ரசிகர்கள்!

Monday, April 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'பேட்ட' திரைப்படம் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. அதே நேரத்தில் நேற்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.

இதனை குறிப்பிட்டு நேற்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பதிவு செய்த ஒரு டுவீட்டில், 'தலைவர் மற்றும் தல ஆட்டம் ஒரே நேரத்தில் தொலைக்காட்சிகளில் நடந்து வருகிறது. தலைவர் மற்றும் தல தோனி ஆகிய இருவரும் என்றென்றும் மறக்க முடியாதவர்கள்' என்று பதிவு செய்துள்ளார்.

ஆனால் இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தோனியாக இருந்தால் கூட 'தல' பெயரை அவர்கள் அஜித்தை தவிர வேறு யாருக்கும் விட்டு கொடுக்க தயாராக இல்லை என்பதே இந்த கண்டனங்களுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சில பக்குவப்பட்ட அஜித் ரசிகர்கள் மட்டும் கார்த்திக் சுப்புராஜூக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.