close
Choose your channels

எம்ஜிஆரை நேரில் பார்த்தது போல் உள்ளது: தொண்டர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி!

Friday, January 17, 2020 • தமிழ் Comments

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கி வரும் ’தலைவி’ திரைப்படத்தில் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமியும், ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரணாவத்தும் நடித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டர் குறித்த ஸ்டில் ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் கேரக்டரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. எம்ஜிஆர் கேரக்டரில் நடித்துள்ள அரவிந்த்சாமி அப்படியே அச்சு அசலாக எம்ஜிஆர் போல் இருப்பதாக அவரது ரசிகர்களும் அதிமுக தொண்டர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

எம்ஜிஆரை மீண்டும் உயிரோடு நேரில் பார்ப்பது போல் இருப்பதாக அவர்கள் கூறுவது இந்த படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz