இது எம்ஜிஆரா? அரவிந்த்சாமியா? ரசிகர்கள் ஆச்சரியம்!

  • IndiaGlitz, [Friday,January 17 2020]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடித்து வரும் அரவிந்த்சாமியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று காலை வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அச்சு அசல் எம்ஜிஆர் போலவே அரவிந்த்சாமி இருப்பதாக எம்ஜிஆரின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் அரவிந்த்சாமி தனது சமூக வலைப்பக்கத்தில் ’தலைவி’ படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளார் எம்ஜிஆர் நடித்த ’புதிய பூமி’ என்ற படத்தில் இடம் பெற்ற பாடலான ’நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்ற பாடலை அரவிந்த்சாமி எம்ஜிஆர் வேடத்தில் பாடுவது போல் இந்த டீசரில் இருக்கிறது.

இந்தப் பாடலையும் அதில் அரவிந்த்சாமியின் கெட்டப் மற்றும் பாடிலேங்குவேஜை பார்த்தபோது உண்மையிலேயே இது அரவிந்த்சாமி தானா அல்லது எம்ஜிஆரே மீண்டும் உயிர்த்தெழுந்து இந்த படத்தில் நடித்துள்ளாரா? என்று கூறுமளவுக்கு இருந்ததாக அனைவரையும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். எம்ஜிஆர் கேரக்டரின் சரியான தேர்வே இந்த படம் வெற்றி பெறுவதற்கு தேவையான தகுதியை பெற்றுள்ளதாக சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

அடுத்தவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு: பொங்கல் தினத்தில் வெட்டி கொல்லப்பட்ட வாலிபர்

அடுத்தவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த 26 வயது வாலிபர் ஒருவர் பொங்கல் தினத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரமேரூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஒரு லட்ச ரூபாயை கூட கண்ணால் பார்க்காதவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரி! அதிர்ச்சி தகவல்

இதுவரை வாழ்நாளில் ஒரு லட்ச ரூபாயைக் கூட மொத்தமாக கண்ணால் பார்க்காத தினக்கூலி வேலை செய்து வரும் ஒருவருக்கு ஒன்றரை கோடி வரி விதித்து வருமான வரி அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது

எம்ஜிஆரை நேரில் பார்த்தது போல் உள்ளது: தொண்டர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி!

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கி வரும் 'தலைவி' திரைப்படத்தில் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமியும், ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரணாவத்தும்

தமிழகம் முழுவதும் பல பெயர்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு – ஒரு பார்வை

விஞ்ஞானமும் அறிவியலும் வளர்ச்சியடையாத ஒரு வாழ்வியல் முறையில் எருதினை அடுக்குதல் மிகவும் உயர்ந்த வீரமாகக் கருதப்பட்டிருக்கலாம்

கார்த்தியின் அடுத்த படத்தின் ரிலீஸ் எப்போது?

கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு தேவ், கைதி மற்றும் தம்பி ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியானது. இதில் கைதி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது