'கத்தி' படத்துடன் கனெக்சன் ஆகும் 'தளபதி 63'

  • IndiaGlitz, [Sunday,March 03 2019]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் பம்பரமாக சுற்றி படத்தின் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா கல்பாதி, தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகை என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் 'கத்தி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பதிவு செய்து 'இந்த போஸ்டர் எனக்கு மிகவும் பிடித்த ஒரு போஸ்டர். இதை நான் என்னுடைய அலுவலகத்திலேயே வைத்துள்ளேன். இந்த போஸ்டருக்கு இணையான ஒரு அட்டகாசமான போஸ்டர் 'தளபதி 63' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டராக வெளிவரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். ஆகமொத்தம் 'தளபதி 63' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கே அவரது ரசிகர்களுக்கு ஒரு அட்டகாசமான விருந்தாக அமையும் என்பது உறுதியாகியுள்ளது.

விஜய், நயன்தாரா, 'பரியேறும் பெருமாள்' கதிர், யோகிபாபு, விவேக், ஆனந்த்பாபு, தீனா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
 

More News

சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த 'ஆஸ்கார் வின்னர்'

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆஸ்கார் விருதுகளில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே விருது 'பீரியட்' என்ற குறும்படத்திற்கு கிடைத்த விருதுதான்.

1 லட்சம் கொடுத்தால் 10 லட்சம் கள்ளநோட்டு: சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் தலைமறைவு!

ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் ரூ.10 லட்சம் கள்ள நோட்டு தரும் குற்றத்தை செய்து வந்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நம்மை அடிக்க ஆள் அனுப்பிய இம்ரான்கான் நல்லவரா?

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புல்வாமா தாக்குதல் அதனையடுத்து இந்திய விமானப்படையின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகியவைகளை அடுத்து இந்தியாவில் நுழைந்து பாகிஸ்தான் விமானங்கள் தாக்க முயற்சித்தன.

சந்தானம் அடுத்த படத்தின் வித்தியாசமான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்

'தில்லுக்கு துட்டு 2' படத்தை அடுத்து சந்தானம் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என்ற  செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

அபிநந்தனுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!

பாகிஸ்தான் ராணுவத்தினர்களால் கைது செய்யப்பட்டு பின் இந்தியா மற்றும் உலக நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக நேற்று விடுதலையான இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு