close
Choose your channels

தளபதி 63' படத்தின் பூஜை தொடங்கியது!

Sunday, January 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி 63 படத்தின் பூஜை தொடங்கியது!

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள 'தளபதி 63' படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் பூஜை சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் தளபதி விஜய், இயக்குனர் அட்லி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இன்று நடந்த பூஜை குறித்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'உங்கள் அனைவரின் ஆசியுடன் எனது நீண்ட நாள் கனவு இன்று நனவானது. இன்று பூஜையுடன் முதல் பணியை தொடங்குகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

விஜய், நயன்தாரா, விவேக், யோகிபாபு, கதிர் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் நடைபெறவுள்ளதாகவும், வரும் தீபாவளி தினத்தில் இந்த படம் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தளபதி 63 படத்தின் பூஜை தொடங்கியது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.