close
Choose your channels

தளபதி 63 டைட்டில்: இதுவரை உலகமே கேள்விப்படாத ஒற்றை வார்த்தையாம்!

Tuesday, June 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'மைக்கேல்', 'சிஎம்', 'வெறி' அல்லது 'வெறித்தனம், 'கேப்டன் மைக்கேல்' என பலவிதங்களில் ஊகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிவதாக சொல்லிக்கொள்ளும் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'தளபதி 63' படத்தின் டைட்டில் குறித்து ஒரு ஹிண்ட் கொடுத்துள்ளார். அதில் 'தளபதி 63' படத்தின் அப்டேட் மிக மிக விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டைட்டில் அபாரமாகவும் அழகாகவும் ஆச்சரியப்பட வைக்கும் அளவிலும் இருக்கும். இந்த டைட்டிலின் வார்த்தையை எல்லோரும் டிக்ஸ்னரியில் தான் தேட வேண்டும். ஏனெனில் இந்த வார்த்தை இதுவரை உலகமே கேள்விப்படாத வார்த்தை' என்று பில்டப் செய்துள்ளார். இந்த பில்டப் எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் நான்கு நாட்களில் தெரிந்துவிடும்.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'தளபதி 63' படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வெளிவரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.