ஜனவரி 1ல் விஜய் ரசிகர்களுக்கு தரமான 'சம்பவம்'

  • IndiaGlitz, [Thursday,November 21 2019]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டெல்லியில் நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்து விரைவில் படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் ஒரு சில டைட்டில்களை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் அவர் சென்னை திரும்பியதும் அந்த டைட்டில்களில் ஒன்றை முடிவு செய்து ஜனவரி 1ஆம் தேதி இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக்கை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் தேர்வு செய்து வைத்துள்ள டைட்டில்களில் ஒன்று ‘சம்பவம்’ என்றும் கூறப்படுகிறது. எனவே ஜனவரி 1ம் தேதி விஜய் ரசிகர்களுக்கு தரமான சம்பவம் இருக்கின்றது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாகவும் மாளவிகா மேனன் நாயகியாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் சாந்தனு அந்தோணி வர்கீஸ், ரம்யா, பிரிகிதா உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை! தொண்டர்கள் அதிர்ச்சி

ஒரு பக்கம் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு இன்னொரு பக்கம் அரசியல் பணிகள் என இந்த வயதிலும் பிசியாக இருக்கும் கமல்ஹாசன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளம் காதலர்கள்: காதல் தோல்வியா?

காதலை பெற்றோர்கள் ஏற்க மறுத்ததால் இளம் காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் பண்ருட்டி அருகே நடந்துள்ளது

ஏற்கனவே 6 பைக்: 7வது பைக் வாங்கித்தராததால் தற்கொலை செய்த இளைஞர்

ஏற்கனவே ஆறு பைக் இருந்தும் ஏழாவது பைக் அப்பா வாங்கித் தராத கோபத்தில் மனமுடைந்த மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

முதல்வர், துணை முதல்வரை சந்தித்த காமெடி நடிகர் சதீஷ்!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் சதீஷூக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நிலையில் விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளது. திருமண வேலையை

வாழ வைத்த தெய்வங்களுக்கு நன்றி சொன்ன சூப்பர் ஸ்டார்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் கோல்டன் ஐகான் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கோவாவில் தொடங்கிய சர்வதேச திரைப்பட விழாவில்