close
Choose your channels

'தளபதி 64' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்!

Saturday, October 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ஓப்பனிங் வசூலில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படமான ’தளபதி 64’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்துள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் படக்குழுவினர் இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்காக டெல்லி செல்லவுள்ளனர்.

டெல்லியில் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெற உள்ளதாகவும், இந்த படப்பிடிப்பின் போது ஒரு சில ஆக்ஷன் காட்சிகளில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

‘தளபதி 64’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி’ திரைப்படமும் விஜய்யின் ’பிகில்’ திரைப்படத்துடன் வெளியாக உள்ள நிலையில், ‘கைதி’ ரிலீஸ் குறித்த டென்ஷன் இன்றி அவர் ‘தளபதி 64’ படப்பிடிப்பில் முழுமையாக மூழ்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மேனன், சாந்தனு, அந்தோணி வர்கீஸ் உள்பட பலர் நடிக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.