close
Choose your channels

தளபதி 65 படத்தின் மாஸ் அறிவிப்பு: ரசிகர்கள் கொண்டாட்டம்!

Thursday, December 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க உள்ள ’தளபதி 65’ படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மதியம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு ஒன்றை அறிவிக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ’தளபதி 65’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’தளபதி 65’ திரைப்படத்தை நெல்சன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியாகியுள்ள இரண்டு நிமிட வீடியோவில் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன், தளபதி விஜய் மற்றும் நெல்சன் ஆகியோர்கள் தோன்றும் காட்சிகளும் உள்ளன. தளபதி விஜய்யின் 65வது படம் குறித்த மாஸ் அறிவிப்பு காரணமாக ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.