'தளபதி 65' ஜார்ஜியா படப்பிடிப்பு முடிவது எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளதாகவும் அதன் பின்னர் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தலில் ஓட்டு போட்ட உடன் அன்று இரவே ஜார்ஜியா கிளம்பிய படக்குழுவினர் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை திரும்புவார்கள் என்று படக்குழுவினர்களின் வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது

அதன் பின்னர் மே மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர்.,

More News

விஜய்-ஜூனியர் என்.டி.ஆர் இணையும் படத்தை இயக்குவது இவரா?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்

விவேக் செய்த கடைசி போன் கால்: நடிகர் கொட்டாச்சி உருக்கமான தகவல்!

பிரபல காமெடி நடிகர் விவேக் சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் அவரது மறைவு தமிழ்த்திரை உலகையே உலுக்கி உள்ளது. இந்த நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்கள்

இந்த லிங்கை மட்டும் கிளிக் செய்யாதீங்க… பொதுமக்களை எச்சரிக்கும் சென்னை காவல்துறை!

பொதுவா ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகிறோம். இந்த வாட்ஸ் ஆப் செயலி பச்சை நிறத்தில் இருக்கும்

சிறுமிகளிடம் சில்மிஷமா? வக்கீல் மூலம் எச்சரிக்கை விடுத்த பிக்பாஸ் டேனியல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய டேனியல் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் இதுகுறித்து வதந்திகளை பரப்புவோர் மீ

போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தயாரித்த இளைஞர் கைது!

கிருஷ்ணகிரி ஒட்டிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பல ஆயிரக்கணக்கான வடமாநில இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.