close
Choose your channels

'தளபதி 65' படத்தின் அட்டகாசமான டைட்டில்: ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு!

Monday, June 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 65’ என்பதும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது

இந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என்ற அட்டகாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த டைட்டிலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இன்று விஜய்யின் பிறந்த நாள் என்பதால் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஜய்யின் பிறந்த நாள் குறித்த ஹேஷ்டேக் டிரண்டிங் ஆகி வரும் நிலையில் சற்று முன் வெளியாகி உள்ள ‘பீஸ்ட்’ டைட்டிலும் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகை அபர்ணா தாஸ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். விடிவி கணேஷ் யோகிபாபு உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.