close
Choose your channels

இணையத்தில் வைரலாகும் 'தளபதி 65' விஜய்யின் புதிய புகைப்படம்!

Tuesday, April 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது என்பதும், படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது என்பதும் தெரிந்ததே. இந்த புகைப்படம் கடந்த இரண்டு நாட்களாக மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது விஜய்யின் கெட்டப் உடன் கூடிய இன்னொரு புகைப்படம் வெளிவந்து உள்ளது. சர்க்கார் படத்தில் இருந்தது போலவே தாடியும் வித்தியாசமான ஹேர் ஸ்டைலும் கொண்ட விஜய்யின் இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய் ஒரு அகதியாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றுமொரு முக்கிய கேரக்டரில் அபர்ணா தாஸ் நடிக்கும் இந்த படத்தில் விடிவி கணேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.