இணையத்தில் வைரலாகும் 'தளபதி 65' விஜய்யின் புதிய புகைப்படம்!

  • IndiaGlitz, [Tuesday,April 13 2021]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது என்பதும், படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது என்பதும் தெரிந்ததே. இந்த புகைப்படம் கடந்த இரண்டு நாட்களாக மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது விஜய்யின் கெட்டப் உடன் கூடிய இன்னொரு புகைப்படம் வெளிவந்து உள்ளது. சர்க்கார் படத்தில் இருந்தது போலவே தாடியும் வித்தியாசமான ஹேர் ஸ்டைலும் கொண்ட விஜய்யின் இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய் ஒரு அகதியாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றுமொரு முக்கிய கேரக்டரில் அபர்ணா தாஸ் நடிக்கும் இந்த படத்தில் விடிவி கணேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

15 ஆண்டுகள் கழித்து திறக்கப்படும் மயானம்...! குஜராத்தில் தாண்டவமாடும் கொரோனா....!

சூரத்-தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடந்த 15 ஆண்டுகளாக மூடப்பட்ட மயானத்தை மீண்டும் திறக்கும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். 

டப்பிங்கின் போது கதறி அழுத 'குக் வித் கோமாளி' புகழ்: வைரல் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்த அனைவருமே வேற லெவலில் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பதும் குறிப்பாக புகழ், ஷிவாங்கி, பவித்ரா, தர்ஷா

நந்தி சிலைக்குள் ரூ.60 கோடி மதிப்பிலான வைரம்? அசட்டு நம்பிக்கையால் நடந்த சுவாரசியம்!

புதையல், மாந்திரீகம் போன்ற அசட்டு நம்பிக்கையைக் கொண்ட ஒரு கும்பல் சிவன் கோவிலில் வைக்கப்பட்டு உள்ள நந்தி சிலையில் ரூ.60 கோடி மதிப்பிலான வைரம் இருப்பதாக நம்பி இருக்கிறது.

சூர்யா-வெற்றிமாறனின் 'வாடிவாசல்' குறித்து சூப்பர் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' என்ற திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட

விஷ்ணுவிஷால்-ஜூவாலா கட்டா திருமண தேதி அறிவிப்பு!

பிரபல தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா ஆகிய இருவரும் காதலித்து வந்தார்கள் என்பதும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது