close
Choose your channels

'தளபதி 65' படத்தின் சூப்பர் அப்டேட்: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ!

Wednesday, March 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள ’தளபதி 65’ திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் நெல்சன் ஆரம்பித்து விட்டதாகவும் ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் ’தளபதி 65’ படம் குறித்த புதிய அட்டகாசமான அப்டேட் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் இந்த அப்டேட் என்னவாக இருக்கும் என்பதை காண விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.