தொடங்கியது 'தளபதி 65' படப்பிடிப்பு: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அட்டகாசமான ஸ்டில்!

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ள ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளனர் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் தங்களது படப்பிடிப்பை தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து அட்டகாசமான ஸ்டில் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் படப்பிடிப்பு தளத்தில் நெல்சன் மற்றும் விஜய் இருக்கும் காட்சியும், பின்னணியில் படக்குழுவினர் பணி செய்து கொண்டிருக்கும் காட்சியும் உள்ளது. இந்த ஸ்டில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் 3 வாரங்கள் நடைபெறும் என்றும் அதன் பின்னர் படக்குழுவினர் சென்னை திரும்பி அடுத்த கட்ட படப்பிடிப்பு நடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே இன்னும் ஒரு சில நாட்களில் ஜார்ஜியாவில் பட குழுவினருடன் இணைந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பாலியல் குற்றவாளியின் மனைவிக்கு பாஜக-வில் சீட்...! தொடரும் கண்டனங்கள்....என்னங்கய்யா உங்க சட்டம்...?

உன்னாவ் சிறுமி பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் குல்தீப்சிங் செங்காரின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட பாஜக சீட் கொடுத்துள்ளது.

வனிதாவின் அடுத்த ஜோடி இவர்தான்: டுவிட்டரில் அறிவிப்பு!

என்னுடைய அடுத்த ஜோடி இவர் தான் என நடிகை வனிதா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திருமணமான ஒரே மாதத்தில் தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை! அதிர்ச்சி தகவல்

திருமணமான ஒரே மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

டான்ஸ் மாஸ்டருடன் சாயிஷா ஆடிய செம டான்ஸ்: வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் நடிகர் ஆர்யாவின் மனைவியான நடிகை சாயிஷா, டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் நெருக்கமாக ஸ்டெப்ஸ்களுடன் நடனமாடிய வீடியோவை

தனுஷை அடுத்து கையில் வாளை தூக்கிய சூர்யா: வெறித்தனமான ஸ்டில் வைரல்!

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'சூர்யா 40' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் கொரோனா வைரஸிலிருந்து மீண்ட சூர்யாவும்