close
Choose your channels

'நீ வாத்தி கம்மிங் பண்றியா', நான் அதைவிட பண்றேன் பாரு: 'தளபதி 66' இசையமைப்பாளர் தமன் சவால்!

Thursday, May 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’விஜய்க்காக நீ வாத்தி கம்மிங், அரபிக்குத்து பண்றியா, நான் அதை விட பெரிதாக பண்ணி காட்டுகிறேன் பார்’ என்று அனிருத்துக்கு சவால் விடும் வகையில் ’தளபதி 66’ இசையமைப்பாளர் தமன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார் .

‘தளபதி 66’ படத்தின் இசையமைப்பாளரான தமன், நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் விஜய் படத்திலேயே நான் இசையமைக்க ஒப்பந்தம் ஆனேன். ஆனால் எதிர்பாராத காரணத்தால் அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது.

இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்திற்கு பிறகு உருவாகும் அடுத்த படத்திற்கு நீதான் இசையமைப்பாளர் என விஜய் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வகையில் அதிர்ஷ்டவசமாக வம்சி மற்றும் தில்ராஜூ அமைந்ததை அடுத்து எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார்.

மேலும் ஒரு மிகச்சிறந்த விஜய் ரசிகனால் மட்டுமே ’வாத்தி கம்மிங்’ ‘அரபிக்குத்து’ போன்ற பாடலை கம்போஸ் செய்ய முடியும் என்றும், அனிருத் தான் ஒரு மிகப்பெரிய விஜய் ரசிகர் என்பதை நிரூபித்து விட்ட நிலையில் அதே போல நானும் என் இதயத்தில் எந்த இடத்தில் விஜய் உள்ளார் என்பதை நிரூபிக்கும் வகையில் ’தளபதி 66’ பாடலை கம்போஸ் செய்வேன் என்றும் கூறினார்.

மேலும் ’தளபதி 66’ படத்தில் மொத்தம் 6 பாடல்கள் என்றும் அந்த பாடல்கள் கம்போஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். அவரது இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos