'தளபதி 67' முழுக்க முழுக்க லோகேஷ் படமா? கசிந்த முக்கிய தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய்தத், கவுதம் மேனன், பிரித்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட 6 வில்லன்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுவது இந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் 50 சதவீத விஜய் படம் என்றும் 50 சதவீத லோகேஷ் படம் என்றும் கூறப்பட்டது. ஆனால் ’தளபதி 67’ திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனை நிரூபிக்கும் வகையில் இந்த படத்தில் பாடல்களே இல்லை என்ற தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான ’கைதி’ படத்தில் பாடல்களே இல்லாத நிலையில் அதே போன்று முழுக்க முழுக்க வித்தியாசமான அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய படம்தான் ’தளபதி 67’ என்றும் இந்த படத்தில் ஒரு பாடல் கூட இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தீம் சாங்ஸ் மட்டும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தனது அதிரடியை தளபதி விஜய்யின் ’தளபதி 67’ படம் மூலம் வெளிப்படுத்த இருக்கிறார் என்ற தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்: பிரபல இயக்குனருக்கு கமல் வாழ்த்து!

இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம் என பிரபல இயக்குனருக்கு உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 

இளையராஜாவிடம் சேர் வாங்க கூட காசில்லையா? லட்சுமி ராமகிருஷ்ணனால் சர்ச்சை!

நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவு செய்த புகைப்படம் ஒன்றை பார்த்த நெட்டிசன் இளையராஜாவிடம் சேர் வாங்க கூட காசு இல்லையா என பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இனிமே எப்படி லீக் ஆகும்ன்னு பார்ப்போம்.. 'வாரிசு' இயக்குனர் வம்சியின் அதிரடி!

 தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்,விசாகப்பட்டினம், சென்னை ஆகிய பகுதிகளில்

நடு ரோட்டில் ரொமான்ஸ் செய்யும் விக்கி-நயன்: வைரல் புகைப்படங்கள்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவுக்கு இரண்டாவது தேனிலவுக்கு சென்றுள்ளார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்

இளசுகளை சொக்க வைக்கும் பிரியங்கா மோகன்: வெள்ளை டீசர்ட்டில் அசத்தல் போட்டோஷூட்!

 நடிகை பிரியங்கா மோகன் தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த வெள்ளை டீசர்ட்டில் உள்ள போட்டோஷுட்