'தளபதி 67' படத்தின் டைட்டில் இந்த இரண்டில் ஒன்றா? 

  • IndiaGlitz, [Friday,February 03 2023]

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் ’தளபதி 67’ படத்தின் தகவல்கள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வெளிவந்து விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் முழு தகவல்கள் கிட்டத்தட்ட வெளியாகிய நிலையில் அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்த ’தளபதி 67' படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.

’மாஸ்டர்’ படத்திற்கு பின் தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் டைட்டில் மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தின் டைட்டில் 'K’ என்ற எழுத்தில் தான் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

ஒரு சிலர் இந்த படத்தின் டைட்டில் ’குருதி’ என்றும் இன்னும் ஒரு சிலர் இந்த படத்தின் டைட்டில் ’கழுகு’ என்றும் கூறி வருகின்றனர். இந்த இரண்டில் ஒன்றுதான் ’தளபதி 67’ படத்தின் டைட்டிலாக இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் உண்மையிலேயே என்ன டைட்டில் என்பதை மாலை ஐந்து மணி வரை வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

தமிழ் திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடிப்பது உண்மையா? போனிகபூர் விளக்கம்!

பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து தற்போது போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.

மனைவி, குழந்தையுடன் டிரெக்கிங் செல்லும் விராத் கோஹ்லி.. அசத்தல் புகைப்படங்கள்!

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோஹ்லி தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகளுடன் டிரெக்கிங் செல்லும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

அஜித்தின் 'துணிவு' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த மாதம் 11-ம் தேதி ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது

இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமான நயன்தாரா.. இயக்குனர்கள் யார் யார்?

 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார் என்பதும் இந்த குழந்தைகளை கவனிப்பதற்காக கடந்த சில

கோடி நெருப்பை ஆரம்பிக்கிற ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி: 'பத்து தல' சிங்கிள் பாடல்!

 சிம்பு நடிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல'.