close
Choose your channels

இதற்காகத்தான் காத்திருந்தோம்.. 'தளபதி 67' படத்தின் செம வீடியோ..!

Wednesday, February 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்துவரும் ’தளபதி 67’ படத்தின் அப்டேட்டுகள் நேற்று மாலை முதல் வெளியாகி வருகிறது என்பதும் இதன் காரணமாக ’தளபதி 67’ ஹேஷ்டேக் நேற்று முதல் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து இந்த படம் நிச்சயம் ஒரு பிரமாண்டமான படமாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய அப்டேட்டாக இந்த படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் விஜய், லோகேஷ் கனகராஜ், த்ரிஷா, அர்ஜூன், மன்சூர் அலிகான், கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர் லலித் உள்பட படக்குழுவினர் உள்ளனர்.

ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த வீடியோ ரசிகர்களுக்கு செம விருந்தாக உள்ளது என்பதும் இதற்காக தான் காத்திருந்தோம் என விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரல் ஆக்கி வருகின்றனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.