close
Choose your channels

'தளபதி 67' வில்லன் சஞ்சய்தத்துக்கு இத்தனை கோடியா சம்பளம்?

Thursday, February 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வில்லனாக சஞ்சய் தத் நடிக்க இருக்கும் நிலையில் அவரது சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

‘தளபதி 67’ படத்தில் மெயின் வில்லனாக நடிக்கும் சஞ்சய்தத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் ’கேஜிஎப் 2’ படத்தில் வில்லனாக நடித்த போதும் இதே தொகை தான் சம்பளம் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

சஞ்சய்தத் மட்டுமின்றி இந்த படத்தில் கௌதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஷ்கின், உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடிப்பதால் அவர்களுக்கும் பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மொத்த த்தில் விஜய் உள்பட படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் சம்பளம் மட்டுமே 200 கோடியை நெருங்கும் என்று கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.